ஆருத்ரா தரிசனம்; வேதபுரீஸ்வரருக்கு வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜை
ADDED :1012 days ago
கோவை; நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வேத மந்திரம் முழங்க அதிகாலை முதல் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.