உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த பரமசிவன்; அஷ்டமி சப்பரங்களில் உலா வந்து அருள்பாலிப்பு

அனைத்து உயிர்களுக்கும் படி அளந்த பரமசிவன்; அஷ்டமி சப்பரங்களில் உலா வந்து அருள்பாலிப்பு

காரைக்குடி; காரைக்குடியில் எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் நகரச் சிவன் கோயிலில் நடந்தது.ஆண்டுதோறும் மார்கழி அஷ்டமி தினத்தன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனியாக சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இந்தாண்டு அஷ்டமி திருவிழா இன்று காலை நகரச்சிவன் கோயிலில் நடந்தது. விழாவையொட்டி கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட அனைத்து சுவாமிகளும் காலை 7 அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரத்தில் புறப்பட்டு ந.புதூர் செஞ்சை கொப்புடையம்மன் கோயில், மகர் நோன்பு பொட்டல் வழியாக இரவு நகரச் சிவன் கோயிலை அடைந்தனர். படி அளக்கும் நிகழ்வில், படி அளந்த அரிசியை பக்தர்கள் பெற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !