உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமெரிக்கர்கள் தரிசனம்; தேவாரம் கேட்டு பரவசம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அமெரிக்கர்கள் தரிசனம்; தேவாரம் கேட்டு பரவசம்

திருவாரூர்; திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வேட்டி, சட்டை, பட்டு புடவையில் தரிசனம் செய்து அமெரிக்கர்கள் பரவசம்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு அமெரிக்காவை சேர்ந்து 22 பேர் 16 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். அவர்கள் தியாகராஜர் மற்றும் ரெளத்ர துர்க்கை சன்னிதியில் வழிபாடு செய்தனர். அங்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு பாடப்பட்ட தேவாரப் பாடலை மெய்மறந்து ரசித்து கேட்டனர். இவர்கள் அனைவரும் தமிழர் பாரம்பரிய வேட்டி, சட்டை, பட்டு புடவையில் தரிசனத்திற்கு வந்தனர். இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், இங்கு வந்து தரிசனம் செய்தது மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !