/
கோயில்கள் செய்திகள் / 100008 வடைமாலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு; பக்தர்கள் பரவசம்
100008 வடைமாலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு; பக்தர்கள் பரவசம்
ADDED :745 days ago
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 1.08 லட்சம் வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் இன்று காலை, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1.08 லட்சம் வடைமாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.