உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்; மத்திய அமைச்சர்

ராமர் அனைவருக்கும் சொந்தமானவர்; மத்திய அமைச்சர்

புதுடில்லி: ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது குறித்து அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடப்பாண்டில் மூன்று முறை தீபாவளி கொண்டாடப்படும். முதலாவது ஜன.,22ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் போது கொண்டாடப்படும். 2வது முறை லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 3வது முறையாக பிரதமர் ஆகும் போது கொண்டாடப்படும். இந்தாண்டு வரும் தீபாவளி பண்டிகையை 3வது தீபாவளியாக கொண்டாடப்படும். இந்தியா முழுவதும் ராமரின் சூழல் உள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரம் வந்துவிட்டது. இந்தியா முழுவதும் மக்கள் உற்சாகம் அடை ந்துள்ளனர். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் மற்றும் அனைவரும் ராமருக்கும் சொந்தமானவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !