ராஜராஜனின் 1,027வது சதய விழா தஞ்சையில் கோலாகலம்!
ADDED :4748 days ago
தஞ்சாவூர்: சோழ மன்னன் ராஜராஜனின், 1,027வது சதய விழா தஞ்சாவூர் பெரிய கோயிலான பிரகதீஸ்வரர் கோயிலில் கோலாகலமாக துவங்கியது. சதய விழாவையொட்டி,கோயிலில் பல்வேறு நிகழச்சிகள் நடக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலின் கட்டிடக்கலை நுட்பத்தை இப்போதும் வெளிநாட்டினர், பிற மாநிலத்தினர் கண்டு, வியந்து செல்கின்றனர். சதய விழா இரண்டு நாட்கள் (24, 25ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகமும், இந்துசமய அறநிலையத்துறையும் இணைந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.