ஆண் நதி
ADDED :5130 days ago
நதிகளை பெண்ணாகப் போற்றுவது மரபு. இதற்காகவே, கங்கா, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, அமராவதி என்றெல்லாம் நதிகளுக்குப் பெண்களின் பெயரிட்டிருக்கிறோம். ஆனால், கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் மட்டுமே பெண் தன்மை கொண்டவை. நம்நாட்டில் பெரும்பாலான நதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்குநோக்கி ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. நர்மதை, தப்தி நதிகள் மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கின்றன. இவை ஆண்தன்மை கொண்டவை என்பதால் அவற்றை நதி என்று சொல்லாமல் நதம் என்று குறிப்பிட வேண்டும்.