ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ராம நாமம்; ஸ்ரீரங்கத்தில் கவர்னர் ரவி பெருமிதம்
திருச்சி: ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ராம நாமம் ஒலிக்கிறது என கவர்னர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி வந்த கவர்னர் ரவி, ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் பட்டர் சுந்தர் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். இதன் பிறகு கவர்னர் ரவி கூறுகையில், இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் ராமர் மயமாகி வருகிறது. ஒவ்வொரு இந்தியரின் இதயங்களிலும் ராம நாமம் ஒலிக்கிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகம் மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இவ்வாறு ரவி கூறினார்.
தூய்மைப்பணி செய்த கவர்னர்; ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்ற கவர்னர் ரவி, தூய்மைப்பணி மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.