அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; வீடியோ அனுப்ப வேண்டுகோள்!
ADDED :732 days ago
அயோத்தி; அயோத்தியில் வரும் 22ம் தேதி ஸ்ரீ ராமஜென்ம பூமியில் புதியதாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. ஜன.,22ல் நடக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் உள்ளத்து உணர்வுகளை வீடியோவாக பதிவு செய்து #ShriRamHomecoming என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட வேண்டும் என ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.