உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் ஏப்ரல் தரிசன ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருமலை திருப்பதியில் ஏப்ரல் தரிசன ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும் தேதி அறிவிப்பு

திருப்பதி; திருமலை திருப்பதியில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியாகும் தேதி அறிவித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம். ஜனவரி 18ம் தேதி காலை 10 மணி முதல் ஜனவரி 20ம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

* ஆன்லைன் பரிசுக்குலுக்கலுக்கு ஜன.,18 காலை 10 மணிக்கு முன்பதிவு
* கல்யாணோத்சவம், ஆர்ஜித பிரம்மோத்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப அலங்கார சேவை டிக்கெட் ஜன.,22 காலை 10 மணிக்கு வெளியாகும்.
* மெய்நிகர் சேவை டிக்கெட் 22ம் தேதி பகல் 3 மணிக்கு வெளியாகும்.
* அங்கப்பிரசட்சணம் டோக்கன் 23 காலை 10 மணிக்கும், அறை முன்பதிவு கோட்டா, அன்று காலை 11 மணிக்கும் வெளியாகும்.

பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !