உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிந்து விரதமிருந்து தரிசனம்

சபரிமலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாலை அணிந்து விரதமிருந்து தரிசனம்

கேரளா; சபரிமலை ஐயப்பன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றடைந்தார். நேற்று திங்கள்கிழமை கொச்சி வந்த மத்திய அமைச்சர் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பம்பைக்குச் சென்றார். மாலை அணிந்து விரதமிருந்து, சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசித்த அமைச்சர் எல்.முருகன் இன்று புகழ்பெற்ற தாலப்பொலி திருவிழா நடந்து வரும் கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் தரிசனம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !