இன்று அஷ்டமி; துன்பம் இல்லா வாழ்விற்கு துர்கை, பைரவரை வழிபடுங்க!
ADDED :703 days ago
அஷ்டமி என்பது பைரவருக்குரிய வழிபாட்டு நாளாகும். வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவர், சொர்ண பைரவரை வழிபடலாம். கால பைரவர் போற்றியை பாராயணம் செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமியில் பைரவரை வணங்குவதாக ஐதீகம். பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே சிவன்கோயில் காவல் தெய்வமாவார். சில ஊர்களில் தனிக் கோயிலும் உண்டு. அஷ்டமி மட்டுமல்ல, ஞாயிறு ராகு காலத்திலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. இன்று துர்கை, பைரவரை வழிபட ஐஸ்வர்யம் கிடைக்கும்.. நல்லதே நடக்கும்.