/
கோயில்கள் செய்திகள் / சத்ய சாய்பாபா ஜென்ம பூமியில் இருப்பது மகிழ்ச்சி; புட்டபர்த்தியில் பிரதமர் நெகிழ்ச்சி
சத்ய சாய்பாபா ஜென்ம பூமியில் இருப்பது மகிழ்ச்சி; புட்டபர்த்தியில் பிரதமர் நெகிழ்ச்சி
ADDED :644 days ago
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இருந்து 30 கிமீ தொலைவில் பாலசமுத்திரத்தில் உள்ள சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப்பொருள் தேசிய அகாடமி (NACIN) திறப்பு விழாவிற்காக, ஆந்திரப் பிரதேசம், சாய் மாவட்டம், ஸ்ரீ சத்ய சாய் விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் ஸ்ரீ சத்ய சாய் சென்ட்ரல் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர், ஆர்.ஜே. ரத்னாகர் பிரதமரை வரவேற்றார். அவரை கண்டதும் பிரதமர் மோடி "சாய்ராம்" ரத்னாகர்ஜி என வாழ்த்தினார். மேலும் ஆன்மீகம், தேசத்தின் நலனில் உத்வேகத்துடன் செயல்பட்டவர் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா என புட்டபர்த்தியில் தனது தொடர்பை நினைவுகூர்ந்தார் பிரதமர். மேலும் "ஸ்ரீ சத்ய சாயியின் ஜென்ம பூமியில்" இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.