ஆட்டம் பாட்டத்துடன் செல்லும் பழனி பாதயாத்திரை பக்தர்கள்
ADDED :706 days ago
வேடசந்தூர்; பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, ஆட்டம் பாட்டத்துடன் ஆடிப்பாடி செல்வது பார்க்கும் மக்களை பரவசமடைய செய்கிறது.
பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா நாளை ஜன. 19ல் துவங்க உள்ளது. திண்டுக்கல் மாவட்டமே கலைகட்டி நிற்கும் நிலையில், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, வாகனத்தில் பக்தி பாடல்கள் முழங்க ஆடிப் பாடி மகிழ்ச்சியுடன் நடந்து செல்கின்றனர். வழி நெடுகிலும் ஆங்காங்கே தங்கி உணவு உண்டு மீண்டும் காலையில் குளித்து தனது பயணத்தை துவக்குகின்றனர். இன்று காலை 11:30 மணியளவில் வேடசந்தூர் வழியாக மணப்பாறை குருசாமி தங்கராஜ் தலைமையிலான பக்தர்கள் குழு பழனி நோக்கி ஆடல் பாடலுடன் சென்றது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் நடந்த வண்ணமே உள்ளது.