/
கோயில்கள் செய்திகள் / மிதிலையில் இருந்து அயோத்தி ராமருக்கு தங்க வில் மற்றும் பாதுகா கொண்ட வந்த அரச குடும்பத்தினர்
மிதிலையில் இருந்து அயோத்தி ராமருக்கு தங்க வில் மற்றும் பாதுகா கொண்ட வந்த அரச குடும்பத்தினர்
ADDED :657 days ago
பீகார்; பீகார், தர்பங்காவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தங்க முகுட், வில் மற்றும் சரண் பாதுகா ஆகியவற்றைக் கொண்டு வந்தனர். சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலையாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப் பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின் சுயம்வரம் இங்கு தான் நடந்தது.
இது குறித்து அரச குடும்பத்தைச் சேர்ந்த கபிலேஷ்வர் சிங் கூறும் போது; ராமரின் மாமியார் வீடு மிதிலா. நாங்கள் மிதிலாவிலிருந்து தங்க முகுட், வில் மற்றும் சரண் பாதுகா ஆகியவற்றைக் கொண்டு வந்துள்ளோம். என்றார்.