உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தை; ‘ராம் ரஹீம்’ என பெயர் சூட்டிய முஸ்லிம் குடும்பம்

ராமர் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தை; ‘ராம் ரஹீம்’ என பெயர் சூட்டிய முஸ்லிம் குடும்பம்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், குழந்தை ராமரின் சிலை நேற்று மதியம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த விழாவை, ஜாதி, மதம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து, பொது மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், பிரோஸாபாத்தில் நேற்று குழந்தை ராமர் பிரதிஷ்டை தினத்தில் பிறந்த குழந்தைக்கு ராம் ரஹீம் என முஸ்லிம் குடும்பத்தினர் பெயர் வைத்துள்ளனர். இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் இப்பெயர் சூட்டப்பட்டதாக அக்குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !