உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஆதியோகி முன் ஜொலித்த ராமநாமம்

ஆயிரக்கணக்கான விளக்குகளால் ஆதியோகி முன் ஜொலித்த ராமநாமம்

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி முன், ஆயிரக்கணக்கான தீப விளக்குகளால், ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற ராமநாமம் ஜொலித்தது. அயோத்தி ராமர் கோவிலில், ராமர் பிராண பிரதிஷ்டை நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த வரலாற்று வைபவத்தை கொண்டாடும் வகையில், கோவை ஈஷா யோகா மையம் சார்பில், ஆதியோகி முன்பு ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற மந்திரம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில், ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, அலங்கரிக்கப்பட்டது. ஆதியோகியின் முன்பு ஜொலித்த ராமநாமம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !