உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் பாதத்தில் ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் வைத்து வழிபாடு

ராமர் பாதத்தில் ஸ்ரீரங்கம் பட்டு வஸ்திரம் வைத்து வழிபாடு

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட ஆடைகள் நேற்று ராமரின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிராணப் பிரதிஷ்டைக்கு முன்னதாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசிக்க பிரதமர் ஸ்ரீரங்கம் வருகை தந்தார். 108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றார். அங்கு பட்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ரங்கநாதர், ராமானுஜர் , கருடாழ்வார் , சக்கரத்தாழ்வார் சன்னதியில் பிரதமர் வழிபட்டார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல பட்டு வஸ்திரம், ஆடைகள் வழங்கப்பட்டது. அவைகள் நேற்று ராமரின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !