உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தைப்பூசம்; திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தைப்பூசம்; திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்., 3 ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழிபாடு துவங்கியது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை  தந்தனர். பலர் நீண்ட வேலால் அலகு குத்தியும், காவடியுடனும், பலர் அலங்கார தேர்களை இழுத்தும் வந்தனர். கடலில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விழாவையொட்டி சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !