உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பு : பக்தர்கள் அருவெருப்பு

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவுநீர் கலப்பு : பக்தர்கள் அருவெருப்பு

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தங்கும் விடுதி கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பக்தர்கள் அருவெருப்பு அடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுவார்கள். இதில் அக்னி தீர்த்த கடலில் இப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கலந்து மாசுபடுத்தியது. இதனை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டித்து, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி ராமேஸ்வரம் நகராட்சி அக்னி கடற்கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை சுத்திகரித்தது. ஆனால் நேற்று நகராட்சி வாறுகாலில் ஏற்பட்ட அடைப்பால் கழிவு நீர் அக்னி தீர்த்த சாலையில் பெருக்கெடுத்து ஓடி, தீர்த்த கடலில் கலந்தது. இதனால் அக்னி தீர்த்தம் கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசியதால் பக்தர்கள் அருவெருப்பு அடைந்தனர். எனவே கழிவு நீரை திறந்து விடும் லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அக்னி தீர்த்தத்தில் சுகாதாரம் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !