அழகானவன்
ADDED :726 days ago
மதுராவின் தலைவனான கண்ணனை போற்றி வல்லபாசார்யார் அருளிய துதிப்பாடல்தான் மதுராஷ்டகம். இதில் கண்ணன் நின்றால் அழகு. சென்றால் அழகு என அவரது மகிமையை புகழ்கிறார்.
வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம் வலிதம் மதுரம்!
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதே ரகிலம் மதுரம்!!
மதுராவின் அரசனான கண்ணனே. உன்னைச் சேர்ந்த அனைத்தும் இனிமை மிக்கவை. நீ பேசும் வார்த்தை, உனது உடல், வாழ்க்கை வரலாறு, அணிந்திருக்கும் ஆடை என நீ அசைந்தும், சுற்றியும் வரும் அழகும் இனிமையானவை.