உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் மீது காவலாளி தாக்குதல்; பக்தர் மண்டை உடைந்தது!

பழநியில் பக்தர்கள் மீது காவலாளி தாக்குதல்; பக்தர் மண்டை உடைந்தது!

திண்டுக்கல்; திண்டுக்கல், பழநி மலை கோவிலில் எடப்பாடி பக்தர்கள் 500 பேர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தரிசனம் செய்ய முந்தியடித்துக் கொண்டு உள்ளே செல்லும் போது, பக்தர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பக்தரின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல், பழநி  கோவிலில் எடப்பாடி, ஈரோடு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இதில் ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல சிறப்பு வழி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் சென்றனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில்  எடப்பாடியை சேர்ந்த சந்திரன் என்ற பக்தரின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த பக்தர் மலைக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் எடப்பாடி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !