உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கொடியேற்றம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் கொடியேற்றம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆறாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகன புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இம்மாதம், 6ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா தொடர்ந்து நடக்கிறது. இதில், கருட வாகன புறப்பாடு, யாழி வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !