திருநள்ளார் கோவிலில் தென் மண்டல வானிலை மைய தலைவர் சுவாமி தரிசனம்
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் தென் மண்டல வானிலை மையத் தலைவர் பாலச்சந்தர் சுவாமி தரிசனம் செய்தார்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். நேற்று தென் மண்டல வானிலை மையத் தலைவர் முனைவர் பாலச்சந்தர் கோவிலுக்கு வருகை புரிந்தனர். இவரை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.பின்னர் வானிலை மைய தலைவர் பாலச்சந்தர் தர்ப்பாரண்யேஸ்வரர். விநாயகர், முருகன்,அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டு பின்னர் பாலச்சந்தர் சனிஸ்வரபகவானை சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். முன்னதாக வானிலை மைய தலைவர் பாலச்சந்தர் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.உடன் மாவட்ட குடிமக்கள் நலச்சங்கம் தலைவர் தனசீலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.