தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
ADDED :619 days ago
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தை அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண கோயில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டியும், முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று தை அமாவாசை தினம் என்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நவபாஷாண கடற்கரையில் குவிந்தனர். தொடர்ந்து வருகை தந்த பக்தர்கள் நவக்கிரகங்கள் அமைந்துள்ள கடல் பகுதியில் புனித நீராடி நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு எள் பிண்டம் கரைத்து தர்ப்பணம் செய்தனர். ஏற்பாடுகளை, செயல் அலுவலர் நாராயணி, எழுத்த தங்கவேல் பாண்டியன் செய்திருந்தனர்.