உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நிறை படி நெல் வைத்து பூஜை; விவசாயம் செழிக்கும்.. பக்தர்கள் நம்பிக்கை

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் நிறை படி நெல் வைத்து பூஜை; விவசாயம் செழிக்கும்.. பக்தர்கள் நம்பிக்கை

காங்கயம்; சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இன்று முதல் நிறை படி நெல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள், பெட்டியில் வைத்து பூஜை செய்வது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் இருக்கும். அதேசமயம் பெட்டியில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக இருக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி உத்தரவு பெட்டியில் இன்று முதல் நிறை படி நெல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் கூறும்போது; இதனால் நெல் விலை உயர்ந்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !