வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி அருள்பாலிப்பு
ADDED :966 days ago
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தை மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வெண்ணெய் காப்பு கவசத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெங்கடாஜலபதியை தரிசனம் செய்தனர்.