பழநி முருகன் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசம் வைத்து பூஜை
ADDED :961 days ago
பழநி; பழநியில் மாசி மாத பிறப்பு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் மாசி மாத பிறப்பு, முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.