வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் சிவ கொடியேற்றத்துடன் மாசி திருவிழா துவங்கியது
ADDED :635 days ago
நாகர்கோவில்: நாகர்கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர்கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, கொடி மரத்துக்கு பால், பன்னீர், களபம், சந்தனம், திருநீறு என பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு சோடஷ தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.