உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடந்தை சங்கர மடத்தின் ஸ்ரீ சரண தீர்த்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிப்பு

குடந்தை சங்கர மடத்தின் ஸ்ரீ சரண தீர்த்தம் ரூ.25 லட்சம் மதிப்பில் புதுப்பிப்பு

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணத்தில் உள்ள சங்கர மடம், சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. மகா பெரியவர் என்றழைக்கப்படும் 68வது பீடாதிபதியான, ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் பட்டாபிஷேகம் கடந்த 1907ம் ஆண்டு இந்த மடத்தில்  நடந்தது. அவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக, காலையில் நீராடி, அனுஷ்டானங்கள் மற்றும் பூஜைகளுக்குப் பயன்படுத்திய சிறிய குளத்திற்கு 70-வது பீடாதிபதி விஜியேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சரண தீர்த்தம் என்று பெயரிட்டார்.. பல ஆண்டுகளாக தீர்த்தக்குளமானது போதிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதையடுத்து சிட்டி யூனியன் வங்கியின் சமூக பங்களிப்பு திட்ட நிதியின் (சி.எஸ்.ஆர்.,) கீழ் 25 லட்சம் ரூபாய் மதிப்பில், புரனமைப்பு செய்துக்கொடுத்தது. இந்த தீர்த்தக் குளத்தை பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இதில், சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர் காமகோடி, முன்னாள் தலைவர் மோகன், டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் கோபாலசுவாமி, நாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன், ஸ்ரீ சங்கர மடம் கைகங்கர்ய சபா தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !