உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி திருவிழா துவக்கம்

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு மாசிப்பெருவிழா இன்று (பிப்.15ல்) காலை வேத மந்திரம் முழங்க, கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது. சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் ஐதீக நிகழ்ச்சிகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம் தலைமையிலான சிவாச்சாரியார்களும், ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !