உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மையான வலிமை ; விளக்குகிறார் ஸ்ரீ்அன்னை

உண்மையான வலிமை ; விளக்குகிறார் ஸ்ரீ்அன்னை

* எப்போதும் அமைதியாக இருப்பதே உண்மையான வலிமை.  
* எந்த செயலில் ஈடுபட்டாலும் கடவுளை நினைவில் கொள்.
* சூழ்நிலைகள் கடினமாக மாறும்போது அமைதியைக் கைவிடாதே.  
* கஷ்டம் வந்தால் அதை கடவுள் கொடுத்த வரமாகக் கருது.
* மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நல்லவழியில் நடந்தால் வாழ்வில் உயர்வு பெறுவாய்.  
* உயிர்களின் மீது அன்பு செலுத்துவது உண்மையான தொண்டு.  
* எவ்வளவு குறைவாக பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
* தொடர்ந்து ஆர்வமுடன் பணியாற்று. முன்னேற்றம் ஒருநாள் வந்தே தீரும்.
* ஆபத்தான வேளையில் பூரண அமைதியே ஒருவருக்கு தேவை.
* கடவுளின் சொற்கள் ஆறுதல் கொடுத்து வாழ்க்கைக்கு ஒளி தருகின்றன.
* எதிலும் நம்பிக்கையுள்ளவனாக உன்னை மாற்றிக் கொள்.
* முழு சரணாகதியில்தான் கடவுளின் அருள் கிடைக்கும்.
* பிறருடன் சண்டையிடுவது கடவுளுக்கு எதிராக போரிடுவது போன்றது.  
* எல்லா உயிரினங்களின் வடிவிலும் இருப்பவர் கடவுள்.
* கடந்ததைப் பற்றி வருந்தாதே. வருவது பற்றிக் கற்பனை செய்யாதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !