தீர்ந்தது குழப்பம்
ADDED :609 days ago
மன்னர் நெப்போலியன் விழிப்பாக செயல்படுவார் என்பதற்கு அவரது வாழ்வில் நடந்த சம்பவம் இது. ஒருநாள் போர்க்களத்தில் அமைக்கப்பட்ட கூடாரத்திற்குள் துாங்கினார். அப்போது எதிரிகளை எப்படி சமாளிப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருந்தார் படைத்தளபதி. மன்னரிடம் ஆலோசித்தால் தீர்வு கிடைக்கும் என கூடாரத்திற்கு வந்த போது, அவர் உறங்குவதைப் பார்த்தார். எழுப்பினால் கோபப்படுவாரே என தயங்கி நின்ற அவரின் அருகில் துண்டு சீட்டு இருப்பதைக் கண்டார். அதைப் பிரித்து படித்த போது எதிரிகளை சமாளிக்கும் விதம் பற்றிய குறிப்பு இருந்தது. அதை படித்த தளபதி தெளிவுடன் புறப்பட்டார்.
உறக்க நிலையிலும் விழிப்பாக இருங்கள்.