உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்த மாதர்களைச் சரணடைவோம்

சப்த மாதர்களைச் சரணடைவோம்

மனதில் மறைந்துள்ள தீயகுணங்கள் ஏழு. இவற்றை போக்கினால் தட்சிணாமூர்த்தி போல நாமும் அமைதியுடன் வாழலாம்.
* தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு எதிரில் சப்தகன்னியர் சன்னதி இருக்கும். சப்தமாதர்கள் என்றும் சொல்வதுண்டு.
* நம் உடம்பிலுள்ள சப்த தாதுக்களுக்கு இவர்களே அதிதேவதைகள். பிராமி –  தோல், மகேஸ்வரி – நிணம்,(கொழுப்பு), கவுமாரி – ரத்தம், வைஷ்ணவி – சீழ், வாராகி – எலும்பு, இந்திராணி – தசை, சாமுண்டி –  நரம்புக்கும் உரியவர்களாவர்.  
* இவர்களை வழிபட்டால் தீயகுணங்கள் அனைத்தும் நீங்கும். பிராமி – காமம், மகேஸ்வரி – கோபம், வைஷ்ணவி – பேராசை,  கவுமாரி – மாயை(நிலையாமை),  இந்திராணி –  குற்றம் காணல், சாமுண்டி –  புறம் பேசுதல் வாராகி –  பொறாமையை போக்கி நம்மை காக்கின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !