உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் தேர் சுத்தம் செய்யும் பணிகள் துவக்கம்

காரமடை அரங்கநாதர் தேர் சுத்தம் செய்யும் பணிகள் துவக்கம்

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேர் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழா, 17ம் தேதி கிராம சாந்தியும்,18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற, 22ம் தேதி பெட்டத்தம்மன் அழைப்பும், 23ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது. 24ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேர் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று துவங்கின. முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது அதைத் தொடர்ந்து. தேர் மீதும், தேரின் சக்கரங்களையும், தண்ணீர் ஊற்றி பணியாளர்கள் சுத்தம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !