புஷ்ப அலங்காரத்தில் கரி வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :931 days ago
கோவை; அன்னூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மாதம் இரண்டாவது புதன்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.