அமிர்தசரஸ் பொற்கோயிலில் அமெரிக்க தூதர் வழிபாடு
ADDED :555 days ago
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொற்கோயில் என அழைப்பர். சிறப்பு மிக்க இக்கோயிலில் இன்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வழிபாடு செய்தார். கோயிலின் தரிசனம் செய்த அவர் பாத்திரங்களை சுத்தம் செய்தும், கோயிலில் புகைப்படம் எடுத்தும் சென்றார். இது குறித்து தனது வலைதளத்தில் எரிக் கார்செட்டி கூறியுள்ளதாவது; "உலகில் உண்மையிலேயே புனிதமான சில இடங்கள் உள்ளன - இந்த பொற்கோயில் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த இடத்தின் புனிதத்தை மட்டுமல்ல, மக்களின் தாராளமான சேவை உலகை மட்டும் எப்படி வரையறுக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள். இந்த புனித இடத்தின் அழகு மற்றும் பிரம்மாண்டத்தில் நான் மயங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.