கோவை சித்தி விநாயகர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை
ADDED :938 days ago
கோவை; ராம் நகர், சித்தி விநாயகர் கோவிலில் திருதியை திதி மற்றும் மாசி மூன்றாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் காலை சந்தன காப்பு அலங்காரத்திலும், மாலை விபுதி காப்பு அலங்காரத்திலும் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.