உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 3ம் நாள் மாசி திருவிழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா

3ம் நாள் மாசி திருவிழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 3ம் நாள் மாசி திருவிழா யொட்டி சுவாமி, அம்மன் வெள்ளி வாகனத்தில் வீதி உலா சென்றனர். ராமேஸ்வரம் கோயிலில் மார்ச் 1ல் கொடி ஏற்றத்துடன் மாசி மகா சிவராத்திரி விழா துவங்கியது. 3ம் நாள் விழாவான நேற்று காலை 6:30 மணிக்கு கோயில் இருந்து வெள்ளி பூத வாகனத்தில் சுவாமி, பிரியாவிடை அம்மனும், வெள்ளி கிளி வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகினர். பின் கோயில் ரதவீதி, திட்டக்குடி வழியாக வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் சுவாமி, அம்மனை பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு மண்டகபடியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 8:30 மணிக்கு கோயிலுக்கு திரும்பினர். இதனால் நேற்று காலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !