உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் வலம் வந்த தி.நகர் பத்மவதி தாயார்

கருட வாகனத்தில் வலம் வந்த தி.நகர் பத்மவதி தாயார்

சென்னை, தி.நகர் பத்மவதி தாயார் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

இதில், நேற்று நேற்று காலை ஸ்ர்வபூபால வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் தாயார் எழுந்தருளினார். இதையடுத்து, மதியம் ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், தொடர்ந்து கர்நாடக இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, உட்பிரஹாரத்தை வலம் வந்து, கோவில் முகப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் தலைமையில், பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில், இன்று காலை சூர்ய பிரபை வாகன புறப்பாடும், மாலை சந்திர பிரபை வாகன சேவையும் நடக்கிறது. 6ம் தேதி ரத உற்சவமும், 7ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !