காஞ்சி சங்கரமடத்தில் பெங்களூரு துவாரகா மடாதிபதி வழிபாடு
ADDED :583 days ago
காஞ்சிபுரம் :கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள துவாரகா மடத்தின் மடாதிபதி ஸ்ரீவித்ய நாராயண தீர்த்த சுவாமிகள், காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு நேற்று வந்தார். சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், துவாரகா மடத்தின் மடாதிபதிக்கு பொன்னாடை, மலர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார். அதை தொடர்ந்து, மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில், துவாரகா மடாதிபதி ஸ்ரீவித்ய நாராயண தீர்த்த சுவாமிகள் வழிபாடு செய்து, பிருந்தாவனத்தை வலம் வந்தார். சங்கர மடத்தின் நிர்வாகிகீர்த்திவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.