உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம் கோலாகலம்

சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம் கோலாகலம்

சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழாவில் இன்று ரத உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா விழாவில் தினமும் தாயார் வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் நேற்று காலை சூர்ய பிரபை வாகன புறப்பாடும், மாலை சந்திர பிரபை வாகன சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை ரத உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை  7ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !