உறையூர் கமலவல்லி தாயார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு
ADDED :660 days ago
திருச்சி; உறையூர் கமலவல்லி தாயார் திருக்கோவில் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருநாள் ஆறாம் திருநாள் இரவு ஆளும் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று இரவு உற்சவத்தில் ஆளும் பல்லக்கில் தாயார் புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தெப்பத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான பந்த காட்சி இன்று இரவு நடைபெறுகிறது.