திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ஆராதனை விழா நிறைவு
ADDED :591 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தில், 23ம் ஆண்டு ஆராதனை நிறைவு விழா முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை ஆசிரமத்தில், பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 23ம் ஆண்டு ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் நிறைவு நாளான இன்று மகன்யாச பூஜை நடந்தது. பகவான் யோகி ராம் சுரத்குமார் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.