அன்ன வாகனத்தில் வலம் வந்த பண்ணாரி மாரியம்மன்; பக்தர்கள் பரவசம்
ADDED :591 days ago
கோவை, கோவை கெம்பட்டி காலனி ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் 28-ஆம் ஆண்டு திருவிழா கணபதி பூஜையுடன் துவங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பண்ணாரி அம்மனுக்கு வாத்தியம் முழங்க சீர் தட்டு கொண்டுவரப்பட்டு, திருக்கல்யாணமும், அலங்கார பூஜைகளும் நடந்தன. புதன் கிழமை அன்று கோவிலில் இருந்து சக்தி கிரகம், பூவோடு ஊர்வலம் அம்மனுக்கு தீபாரதனை பூஜை செய்யப்பட்டது. இன்று அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனத்தில் அம்மன் நீல நிற பட்டு உடுத்தி முக்கிய வீதிகளின் வழியே திருவீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.