அமெரிக்காவில் மகா சிவராத்திரி கொண்டாட்டம்; ஆடி பாடி பக்தர்கள் பரவசம்
ADDED :591 days ago
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. இந்த மகிமை மிக்க சிவ வழிபாடு இந்தியா மட்டும் மல்ல உலகம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில், மகா சிவராத்திரி கொண்டாட்டம் களை கட்டியது. சிவராத்திரியை வரவேற்கும் வகையில் உற்சாகமாக ஆடி பாடி மக்கள் கொண்டாடிவருகின்றனர்.