மகா சிவராத்திரி; ஆதி வாலீஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :946 days ago
விழுப்புரம்; விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே பூந்தோட்டம் மேட்டு தெருவில் அமைந்துள்ள வாழாம்பிகை சமேத உடனூரை ஆதி வாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.