எல்லாம் ஒரே நாளில்...
ADDED :582 days ago
மகாசிவராத்திரியன்று நடந்த புராண நிகழ்வுகள் இவை.
* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.
* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகப்பெருமான் ஆகியோர் சிவனருள் பெற்றனர்.
* இந்திரன் தேவலோகத்தின் அதிபதியானார்.
* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.
* சிவனின் உடலில் இடது பாகத்தைப் பெற்றாள் பார்வதி.
* தவமிருந்த அர்ஜுனனுக்கு பாசுபதம் என்னும் அஸ்திரம் கிடைத்தது.
* சிவனுக்குத் தன் இரு கண்களையும் கண்ணப்பர் அளித்தார்.
* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.
* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவன்.
* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் திருவண்ணாமலையில் சிவனின் திருமுடி, திருவடியைத் தேடினர்.