உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி மாத பிறப்பு ; பழநி முருகன் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை

பங்குனி மாத பிறப்பு ; பழநி முருகன் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை

பழநி; பழநியில் பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி முருகன் கோயிலில் பங்குனி மாத பிறப்பு, முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடைபெற்றது. ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கொடுமுடியிலிருந்து தீர்த்தம் காவடி எடுத்து வர துவங்கியுள்ளனர். மலைக்கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !