பழநியில் ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :934 days ago
பழநி; பழநி கோயிலுக்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். பழநி கோயிலுக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஜப்பான் டோக்கியோ நகரைச் சேர்ந்த பக்தர்கள் ஆறு பேர் தமிழக பாரம்பரிய உடையான சேலை அணிந்து, நெற்றியில் திருநீறு, குங்குமம் வைத்து வருகை புரிந்தனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்தனர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.